Saturday, September 18, 2010

சிறு,சிறு கவிதைகள்

1.  இரண்டும் ஒன்று தான்


     இழக்கவிரும்பாத தோல்விகள் என்னிடம்

      பெற முடியாத வெற்றிகள் உன்னிடம்.



2.  விழி மூடிக்கேட்டு ரசித்தார்கள்

     விழி இழந்த்தோர்

     சேர்ந்திசையை.

3.  நலுங்கக் குளம்

    மெதுவாக இறங்குகிறது

       நீரடா பூரண நிலா

4.  கையும் களவுமாய்

      கைவிடப்பட கைகள்

Friday, September 17, 2010

நிழல்பிரதிகள்



அதனை
முதலில் சந்தேகிக்கிறோம்

கழுகின் கண்களில் பார்க்கிறோம்
கதவு திறந்து விடுகிறோம்
எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்
எத்தனையோ நடந்துவிட்டது என்று, அதற்காக
எதைஎதையோ செய்கிறோம்
எத,எதற்க்கோ உடன் படுகிறோம்
 இறுதியில்
தளர்ந்த மூச்சை விடுகிறோம்
பிறகு
அதன் நிழல்பிரதிகளாய் மாறுகிறோம்

Thursday, September 16, 2010






விரிந்த சிறகுகாற்றுக்கு அசைகிறது
 இறந்த பறவை பறந்தபடி இருக்கிறது
மரணத்தின் மீது




 






தாவலின் கடைசித் தருணம்




மிதிபட்டு இறந்துபோன



குஞ்சுத்தவளையின் முகத்திலிருந்தது



ஒருகுழந்தையின்புன்னகை

Tuesday, September 14, 2010

பகற்ப் பொழுது காட்சிகள்









சிறுவர்கள் காட்டிவிளையாடுகிற


கண்ணாடியில் சிறு மேகத்தோடு

தரைக்குவந்துவிடுகிறது சூரியன்

அவர்கள் ஏந்திக்களிக்கும் திசை எங்கும்

துண்டு வெயிலாய்த் துள்ளித் திரிகிறது

இருளடர்ந்த வீட்டுச்சந்துகளில்

மின்மினியாகி மினுங்கி மறைகிறது

எதிர்பாரத் தருணமொன்றில்

அவ் வெளிச்சத்தைக்கடக்கிற காக்கையொன்று

வெண் பறவையாய் மாறிப்பறக்கிறது.

இளைஞன் ஒரு கணம்

நரை தலையோடு

வயோகிதத்தை அடைந்து மீள்கிறான்.

தெருவில் விழுந்து நகரும்

சதுர வெயிலைத் துரத்திப்பிடிக்க முயன்று

தோற்று ஓய்கின்றன தெரு நாய்குட்டிகள்.

விடுமுறைப் பகற்பொழுதுவெளிச்சத்தை

தீப்புள்ளிகளாக்கி பாடபுத்தகத்தின்

பக்கங்களை எரியூட்டுகிறார்கள்

பள்ளிச்சிறுவர்கள் .


















Wednesday, September 8, 2010

எனக்கான இடமும், இருப்பும்











கிளை அதிர எழும்பிப்பறக்கிற பறவை

சிறகிலிருந்து உதிர்கிறது ஒரு இறகு

கிளையிலிருந்து உதிர்கிறது ஒரு இலை

இறகு

பறப்பதற்க்கான பயணச்சீட்டு

இலை

இருந்ததற்க்கான ரசீது

Monday, September 6, 2010

நீர் வெளியில் சிலகவிதைகள்










நிரம்பிய கோப்பைகள்


நுரை வழியத் ததும்பி

மகிழ்கின்றன



காலி கோப்பைகள்

கல,கலத்து

கலவரப்படுகின்றன.







வருகையாளார் இன்றி

கிடக்கிற உணவு மேசையினடியில்

சிற்றெறும்புகள்

முடித்துக்கொள்கின்றன

தனது சிற்றுணவை.







நுரை ததும்ப குவளைகளிருந்த மேசைக்கு

மெதுவாக

நீந்தி வருகின்றன

இரு பொறித்த மீன்கள்.