Tuesday, September 14, 2010

பகற்ப் பொழுது காட்சிகள்









சிறுவர்கள் காட்டிவிளையாடுகிற


கண்ணாடியில் சிறு மேகத்தோடு

தரைக்குவந்துவிடுகிறது சூரியன்

அவர்கள் ஏந்திக்களிக்கும் திசை எங்கும்

துண்டு வெயிலாய்த் துள்ளித் திரிகிறது

இருளடர்ந்த வீட்டுச்சந்துகளில்

மின்மினியாகி மினுங்கி மறைகிறது

எதிர்பாரத் தருணமொன்றில்

அவ் வெளிச்சத்தைக்கடக்கிற காக்கையொன்று

வெண் பறவையாய் மாறிப்பறக்கிறது.

இளைஞன் ஒரு கணம்

நரை தலையோடு

வயோகிதத்தை அடைந்து மீள்கிறான்.

தெருவில் விழுந்து நகரும்

சதுர வெயிலைத் துரத்திப்பிடிக்க முயன்று

தோற்று ஓய்கின்றன தெரு நாய்குட்டிகள்.

விடுமுறைப் பகற்பொழுதுவெளிச்சத்தை

தீப்புள்ளிகளாக்கி பாடபுத்தகத்தின்

பக்கங்களை எரியூட்டுகிறார்கள்

பள்ளிச்சிறுவர்கள் .


















No comments: