Tuesday, April 24, 2012

மீனும், மீன்கொத்தியும்






காற்றில் பறக்கிறது

சட்டென்று
தாழப்பாய்ந்து

நீரைக்கிழிக்கிறது

நீரில் மிதக்கிறது
சட்டென்று    
மேலேபறந்து

காற்றைக்கிழிக்கிறது.

Monday, April 23, 2012

காதல் முட்டைகள்.



சிறு மோதலில்
முத்தமிட்டு உடைந்து விட்டன
இரு முட்டைகள்.

உடைந்த முட்டையிலிருந்து
குலைந்த கருவை
கலக்கி உற்றுகிறேன்
கொதிக்கிற கல் மேடையடுப்பில்.

தளதளத்து வேகிறது
காதலின் இரு ஆன்மாக்கள்.



Friday, April 13, 2012

இரையின் பசி







  உலைகொதிக்கும் இதயம் 
 வளைக்கரம்பற்றி  இழுத்து
 ருசித்த உதடுகளில்
 ஒருவகை ருசி.
   
 திமிரும் உடலோடு, 
 முனகல் குரலோடு

 சேர்த்தணைத்து
 உதடுகள் பதித்து
 உறைந்த மின்னற்ப்பொழுது

 திகைத்துசுடரும்
 இருவிழிகள்  செருகக்கண்டது

 இரையின் பசி 

இரு கொடியில் இரு மலர்கள்






இரு கொடியில்
இரு மலர்கள்

ஒன்றை போலவே
மற்றொன்று...

அதே நிறம்
அதே தூய்மை
அவிழும் நறுமணமும்
ஒரே வாசனை

மலர்களைச் சுற்றி சுற்றி
களி கொள்கின்றன கண்கள்

பறிக்கும் விரல்கள் நினைந்து
பதை பதைக்கிறது மனம்