Sunday, November 21, 2010

ஆட்டம்

ஆட்டம்



குதி காலயுர்த்தி அதன் விளிம்பில் அமர்ந்தவாறு






கன ரக சாவியொன்றை தரை மண்ணில் கிளறியபடி



களபரிசோதனையாளன்



டாஸ் வென்ற குழு முதலில்



பந்து வீச்சை தேர்ந்து எடுக்கலாம்



ஆட்டத்தின் தொடக்கதிலேயே



விக்கெட்டுகளைச் சாய்க்கலாமென்றும்



பந்து காற்றில் திசை மாறி சுழலுமென்றும்



மட்டையாளர்கள் நன்கு ஆடும் பட்சத்தில்







இக் கணிப்புகள் மாறலாம் என்றும்



தொலைக்காட்சிக்கு பேட்டி தருகிறான்







சிறியவிளம்பர இடைவேளைக்குப் பிறகு



நடக்க இருந்த ஆட்டத்தைக் காண



ஆவலோடிருந்த தருணத்தில் ஏற்கனவே



தொடங்கியிருந்தது ஆடு களத்தில்



மழையும், காற்றும் தனது ஆட்டத்தை

Friday, November 12, 2010

இம்மாத ரசனை இதழில் வெளியான எனதுகவிதை 2

கண்மலாரத கடவுள் 



பிறந்த குழந்தையை உங்கள் கரங்களிட்டால்
மரத்துப்போன கரங்களை உடனே நீட்டிவிடாதீர்கள்.
மேகம் நிலவை மிதக்க வைப்பது போல்
மிக மெதுவாக எந்திகொள்ளுங்கள்.
விழி மூடியிருந்தால் எழுப்ப எத்தனிக்காதீர்கள்
அது இன்னும் கண்திறக்காத கடவுள்.

மருத்துவ விடுதி இரைச்சலையும் தாண்டி
மென்ஒலிகளால் உங்களுடன்பேச ஆரம்பித்தால்
பதிலுக்கு பேச முயற்ச்சிக்காதீர்கள்.
வாழ்க்கைப் புதிரின் மர்ம முடிச்சுகளை
அவிழ்க்கும் அதன் தேவபாஷையை
புரிந்து கொள்ள முயலுங்கள்.

அதுஅசைகிற கை,கால்களில்
அரூப சிறகுகளிருப்பதை அறிந்து தொடுங்கள்.

சட்டென அவசரத்தில் அதன் கன்னங்களில்
உங்களது உலர்ந்த உதடுகளால் முத்தமிட்டுவிடாதீர்கள்.
அது பூத்துத் தருகிற அபூர்வ சிரிப்பிற்காகக் காத்திருங்கள்.

நீங்கள் அமுத சுரபியை
கைகளில் வைத்திருக்க மட்டுமேஅனுமதிக்கப்பட்ட
அன்றாடங்காய்ச்சி என்பதை மறந்து விடாதீர்கள்




நன்றி ரசனை இதழ் nov2010

Monday, November 8, 2010

ஒன்றுதான்

தெருவெங்கும் பூக்கள் 
சவம் போயிருக்கும் என்றார் ஒருவர்
இல்லை தலைவர் வந்திருப்பார்
என்றார் இன்னொருவர் 
இரண்டும் ஒன்றுதான்
என்றேன் நான்

Thursday, November 4, 2010

இம்மாத ரசனை இதழில் வெளியான கவிதை

நகரத்து யானை
முழ்ந்தாளிட்டு
கைகளைத்தரையில்ஊன்றி
முதுகில்  தன் தம்பியை ஏற்றி
அசைந்தசைந்து நடந்து
வலது கையை தும்பிக்கையாய்
உயர்த்திப்பிளிறிய போது
ஏற்ப்பட்டசந்தோசம்
உயர்த்திய கையை விரித்து
காசுகேட்டபோது நொறுங்கியது

Wednesday, November 3, 2010

மிதந்து செல்வதற்க்கான நீர் வெளி

கோப்பையில் தளும்புகிறது


நீங்கள் மிதந்து செல்வதற்க்கான நீர் வெளி

குப்பியிலிருந்துகோப்பைக்கு ஊற்றி

அதன் மணத்தை உங்கள் நாசிக்கு ஏற்றுகிறீர்கள்



எதிரில் இல்லாத ஒருவருடன்

சியர்ஸ் சொல்லி அருந்தும்

முதல் துளி வாளின் கூர்மையை

உள்ளே பாய்ச்சுகிறது

பிறகு அடுத்தடுத்துத் துளிகள்

உங்களை மழையில் நனைக்கிறது



மழைத்துளி விழுந்த மண் எழுப்பும்

மெல்லிய வெப்பம் உங்கள் உடலிலும் பரவுகிறது

பிறகு மெளனத்திலிருந்து

ஒரு நாக்கு நீண்டு உங்களுடன் உரையாடும்



மது ஒரு மனசிலக்கி

திடமானவர்களை மிருதுவாக்கிறது

தவிப்பின் மனிதர்களுக்கு சாந்தமளிக்கிறது

செய்யாத தவறுக்கும் மன்னிப்பு கேட்கிறது

எளிதில் திறக்காதக்கதவுகளை திறந்து வைக்கிறது



ஒளிந்து பிடிக்கும் இவ்வுலக வாழ்வில்

உங்களை நீங்களேகண்டுபிடிக்க உதவுகிறது



குளிர்ந்த திரவத்தில் நீங்கள் குஞ்சு மீனாகலாம்.

தாயின் மடிநினைந்து தலை சாய்க்கலாம் .

அளவான மது அரு மருந்து அறிக .