Wednesday, November 3, 2010

மிதந்து செல்வதற்க்கான நீர் வெளி

கோப்பையில் தளும்புகிறது


நீங்கள் மிதந்து செல்வதற்க்கான நீர் வெளி

குப்பியிலிருந்துகோப்பைக்கு ஊற்றி

அதன் மணத்தை உங்கள் நாசிக்கு ஏற்றுகிறீர்கள்



எதிரில் இல்லாத ஒருவருடன்

சியர்ஸ் சொல்லி அருந்தும்

முதல் துளி வாளின் கூர்மையை

உள்ளே பாய்ச்சுகிறது

பிறகு அடுத்தடுத்துத் துளிகள்

உங்களை மழையில் நனைக்கிறது



மழைத்துளி விழுந்த மண் எழுப்பும்

மெல்லிய வெப்பம் உங்கள் உடலிலும் பரவுகிறது

பிறகு மெளனத்திலிருந்து

ஒரு நாக்கு நீண்டு உங்களுடன் உரையாடும்



மது ஒரு மனசிலக்கி

திடமானவர்களை மிருதுவாக்கிறது

தவிப்பின் மனிதர்களுக்கு சாந்தமளிக்கிறது

செய்யாத தவறுக்கும் மன்னிப்பு கேட்கிறது

எளிதில் திறக்காதக்கதவுகளை திறந்து வைக்கிறது



ஒளிந்து பிடிக்கும் இவ்வுலக வாழ்வில்

உங்களை நீங்களேகண்டுபிடிக்க உதவுகிறது



குளிர்ந்த திரவத்தில் நீங்கள் குஞ்சு மீனாகலாம்.

தாயின் மடிநினைந்து தலை சாய்க்கலாம் .

அளவான மது அரு மருந்து அறிக .

No comments: