நெரிசலில் புழுங்கியிருந்த
தார் சாலைவிபத்து ஒன்றில்
மிடறு தண்ணீரோடு இளைப்பாறி
உயிர் பிரிந்த இடமெங்கும்
உன் ரத்தம்.
தினமும் அவ்விடத்தை
கடக்க நேர்கிற போது
ஆறாத காயங்களோடு பதைபதைக்கிறேன்.
சிறு மழையேனும் பெய்து
அச்சுவடு கரைத்தால்
துயர் நீக்கிய வடுக்களோடு
கடந்து பயணிக்ககூடும்.
இருப்பினும்
ஒரு விபத்து போலாவது
வருவதில்லை மழை
No comments:
Post a Comment