கதவு திறந்து
கடந்த கணத்தில்
பதறிச் சாந்தமடைகின்றன
கண்ணாடித்தொட்டிமீன்கள்.
நின்று விடுகிறது
நனைந்து கொண்டிருந்த
குளியலறை பாடல் ஒன்று
சட்டென பிரிகின்றன
முத்தங்ககொள்ளும்
இரு ஜோடி உதடுகள்.
காண நேர்ந்துவிடுகிற அக்கணம்
படபடக்கிறது
மேலும்
கடக்க முடியாதகணங்களாகி விடுகின்றன.
இம்மாதஉயிர்எழுத்து இதழில்வெளியான எனதுகவிதை
No comments:
Post a Comment