கலைந்த கூந்தலில் விரிந்தமலர்
விரிந்தமலரின் வாடை
கிளர்த்தியிழுக்கிறது.
விரிந்தமலரின் வாடை
கிளர்த்தியிழுக்கிறது.
வாசிக்கும் செவ்விதழ்
செவ்விதழ் சிறு முறுவலிப்பு
ஆளை உலுக்குகிறது.
எவ்வித பரபரப்புமின்றி
எல்லாவற்றிலிருந்தும் விலகி நின்று
பரிகசிக்கும் பாவனைகள்.
இரை அசைகிற போது
அதன் ஊடே அசைகிறது
இரை பதுங்கிற போது
அதன் ஊடே உறைகிறது.
பசித்த மிருகத்தின்
இரு ஜோடிக்கண்கள்.
(பிப்ரவரி உயிர் எழுத்து இதழில் வெளியான எனது கவிதை ஒன்று )
2 comments:
நல்ல கவிதை...keep writing
நன்றி சமுத்ரா உங்களது வேகமான விமர்சனம் வியக்க வைக்கிறது
Post a Comment