அப்பாவின் ஆடைகள்
அவரைப் போலவே
விரைப்பாய்க் காய்கின்றன
அம்மாவின் புடவைகள்
அவளின் சுபாவம் போலவே
நெளிந்து தவழ்கிறது
அக்காவின் தாவணி
அடுத்தநிமிடத்தில் பறக்கஇருக்கிறபறவையைப்போல
சற்று தள்ளி படபடக்கிறது
தம்பியின் ஆடைகள்
எக்களித்து உரசியவாறு
இரவு நிலவொளியில் காய்கின்றன
எடுக்க மறந்த
எங்களின் நேற்றைய உடுக்கைகள்
6 comments:
nice! nice!!!!!
நன்றி சமுத்ரா
அருமையான உவமை நயம்! அருமை! இந்த பதிவு வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளது வாழ்த்துக்கள்!
சிம்பிள் மற்றும் அருமை
.அன்பும் நன்றியும் ஜெயந்தி அம்மா
அன்பும் நன்றியும் சுரேஷ்
Post a Comment