Friday, July 27, 2012

* உறக்கம்











நெடுஞ்சாலையோரத்தில்
ஆழ்ந்துறங்கிக்கொண்டிருக்கிறார்கள்
நடை பாதைவாசிகள்.

அவ்வுறக்கத்தின் மீது
ஓடிக்கொண்டிருக்கின்றன
எண்ணற்ற வாகனங்கள்.

 ஒரு வினாடி
வெறுப்புத்தோன்றி மறைகிறது.

விழித்தபடிவாகனம்
ஓட்டுபவர்களுக்கு
உறங்கும்நடை பாதைவாசிகளின் மீது.




Wednesday, July 25, 2012








   ஈரோடு சி.கே .கே அறக்கட்டளையின்  இலக்கிய விருது மற்றும் இருபத்தி ஐந்தாயிரம் ரொக்கம்  இந்த வருடம் எழுத்தாளர்ஜெயமோகன்  அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இடம் ஈரோடு வடிவு சுப்பிரமணியம் திருமண மண்டபம் ஈரோடு நாள் 29 .07 .2012  ஞாயிறு. காலை10 .30 க்கு கவியரங்கம். மாலை 4 .00 மணிக்கு இலக்கிய விருது மற்றும் கருத்தரங்கம். நடைபெற இருக்கிறது.எழுத்தாளர் பிரபஞ்சன், கரு ஆறுமுக தமிழன் இறையன்பு I A S  ,. வெண்ணிலா,மரபின்மைந்தன்    மேலும் பல இலக்கிய ஆளுமைகள்கலந்து கொள்ள இருக்கிறார்கள்.  அனைவரும் வருக.