காதல்
குடை மறந்து
மழை பிரசங்கம் கேட்பது. தேன் துளிகளை
பழுக்க வைத்து
கனியாக்கி உதிர்ப்பது.
நட்சத்தித்திரங்களை ஊட்டுவது.
ஒவ்வொரு சொல்லுக்கும்
எல்லாவற்றையும் தாரை வார்ப்பது.
ஏழு கடல் ஏழு மலை தாண்டி
ஒருபூவை மட்டும்பறித்துவருவது
நகர எல்லையில்
விட்டு வந்தும்
வழி தடம் முகர்ந்து
வீடு வந்து சேர்வது.
வசைகளுக்கும் நடுவே
இசை பட வாழ்வது .
உதட்டு மின்கம்பிகளில்
முத்தங்களை கடத்துவது.
2 comments:
//வசைகளுக்கும் நடுவே
இசை பட வாழ்வது . //
அதையேன் கேக்குறீங்க..
அருமையா இருக்குங்க ரவி..
நன்றி பாலா
Post a Comment