Monday, August 29, 2011

உங்கள் கைகளில்லை







அவர் கைகளில்லை
இவர்கைகளிலுமில்லை
உங்கள் கைகளில்லை
என்கைகளிலுமில்லை
 
பாசாங்குகள் போதும்
எவர் கைகளிலிருக்கிறது
இக் காற்றுப் பெருவெளியில் 
நாம் மூச்சுவிடுவதற்க்கான அனுமதி

Monday, August 22, 2011

மீள் பருவம்


சிறகுகள் உதிர்ந்த ஈசல்கள்
மறுபடியும்
புழு பருவத்தை எய்தி
மறிக்கின்றன

Saturday, August 20, 2011

உன்னைப்போல் ஒன்று





 



அதைப் போலொரு
பறவையைப்  பலியிட்டு
படையலுடன்
பிரார்த்தனனகளுடன்
அண்ணாந்து வானம் நோக்கி
அழைத்த படியிருந்தான்.

 குறித்த நேரத்தில்
அவ்விடத்தைத்தினம்
வந்தடைகிற அது
அன்று வரவே இல்லை.

ஆளற்ற வானந்தரத்தில்
நாற்றமடிக்கத்தொடங்கியிருந்த
அவனை போலொரு
அழுகிய ஒன்றை
கொத்தி தின்று கொண்டிருந்தது அது .

Tuesday, August 16, 2011

காகிதத்தின் மீதுகடல்






சிறுமி காகிதத்தின் மீது
ஏழு கடலின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்
அதில்
ஏழு மீன்களை நீந்தவிடுகிறாள்
ஏழு மலைகளின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்
அதன் முகடுகளில்
ஏழு பஞ்சு மேகங்களை மிதக்கவிடுகிறாள்
ஏழு மேகங்கலிருந்து
சில மழை துளிகளை உதிர விடுகிறாள்

மழைத் துளிகள் விழுமிடத்தில்
ஒரு பூவின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்
அதனடியில்
தன் பெயரை எழுதுகிறாள்
இனி அவளை காண்பதென்றால்
ஏழு கடல்  ஏழு மலைளைத் தாண்டி
பயணிக்க வேண்டியிருக்கும் நமக்கு

Sunday, August 7, 2011

அனுப்பிய செய்தி

இதைதந்திபோல்பாவித்து
உடனே கிளம்பு  என்றிந்தது
அப்பா அனுப்பியிருந்த

ஈமெயில்செய்தியில்

Friday, August 5, 2011

ஒரேஆற்றில் இருமுறை.







ஒரே ஆற்றில்
இரு முறை இறங்கினேன்!
ஒரு முறை ஆற்றில்
நீர் ஓடிக்கொண்டிருந்தது,
இன்னொருமுறை
ஆற்றுமணலில் இறங்கி
நான்ஓடிக்கொண்டிருந்தேன்.