Monday, May 31, 2010

ரசிகக்குழந்தை

                                               








சுட்டுவிரல் எச்சரிக்கைக்காட்டி

விழிகளை உருட்டிக்காட்டி

நாக்கை மடித்துக்காட்டி

பலனேதுமில்லை

கதகளிநடனம் கண்டகளிப்பில்

சிரிக்கிறது ஒருரசிகக்குழந்தை
thadagham.com
தடாகம்.காமில் வெளியானது

Saturday, May 29, 2010

                                               



அம்மலருக்கு


இரண்டு கால்கள்

ஓயாது நட்னமிடுகிறது

காற்றின் இசைக்கு                                                                      











Thursday, May 27, 2010

ஒரு இடம் காலியாயிருக்கிறது

.









யாருமற்ற வீட்டில்

விழுந்து புரள்கிறது
செய்தியை வாசிக்கச் சொல்லி
ஒரு கடிதம்


யாருமற்ற தெருவில்
கிடந்து மின்னுகிறது
மர்ம அறையைத் திறக்கச்சொல்லி
ஒரு கள்ளச்சாவி


யாருமற்ற அறையில்
மன்றாடுகிறது
மதுக்கோப்பையாய் மாற்றச்சொல்லி
ஒரு தேநீர்க்குவனள
.

யாருமற்ற நள்ளிரவு பேரமைதியில்
புணரச்சொல்லி கிளர்வூட்டுகிறது
மெல்லிய தாழை மணம்

யாருமற்ற வெளியில்
எல்லோருக்கும்

ஒரு இடம் காலியாயிருக்கிறது

உயிர்மையில்வெளியான கவிதை











































































































Thursday, May 13, 2010

இல்லாதாது

  நெடுங்காலமாகியும்

அன்புள்ள என்று

கடிதமெழுத ஆரம்பிக்கும் நாம்

சில விசயங்களைதெளிவுபடுத்திகொள்ளலாம்

அன்பு இல்லாதவற்க்கே

அதை எழுதுகிறோம்

நம்மிடம் அது இருப்பதுபோல்

பாவித்துக் கொள்கிறோம்

அது இருப்பதால் தான்

இந்தபூமி இன்னும்இயங்குதுவதுபோல்

சொற்களால் நிர்மாணிக்க முயலுகிறோம்

thadagam.com வெளியானது

Wednesday, May 12, 2010

தனக்கு தரவந்ததுபோல்

தாயின்கன்னத்திற்க்கு

இட்டுத் திரும்புகிற

தந்தையின் முத்தத்தைக்கண்டு

களிகொள்கிறது கைக்குழந்தை
thadagam.com வெளியானது





          

Tuesday, May 11, 2010

தாவலின் கடைசித் தருணம்


மிதிபட்டு இறந்துபோன

குஞ்சுத்தவளையின் முகத்திலிருந்தது

ஒருகுழந்தையின்புன்னகை


 நீரினுள் மூச்சுத்திணறி            
இறந்தது போல்நிலைகுத்தியகண்கள்

வாய்பிளந்துகாற்றைப்புசித்தபடி

கடைவீதிக்குவந்துவிடுகின்றன

சிக்கியமீன்கள்

Wednesday, May 5, 2010

பெட்டி, பெட்டியாக
கடந்து மறைகிறது
                    என் கைப்பெட்டி தொலைந்த
ரயில்வண்டி

இடப்படாத முத்தம்

                                                யாரும் அறியாது

                                                எவர் நிழல்மீதும் படாது
                                                 நுனிக்கால் ஊன்றி
                                                  பதுங்கிப்பதுங்கி
                                                   கள்ளக்காற்றைப்போல்
                                                  உதடுகளின் மிகஅருகே
                                                   கொண்டு சென்றேன்
                                                      இலேசாகநடுங்குகிறது
                                                     முத்தம்