Wednesday, May 30, 2012

குழந்தைகள் வளர்கிறார்கள்

குழந்தைகள் வளர்கிறார்கள்
சிறு குத்துச்செடிபோல
தத்தளிக்கும் இலைகளோடு
திமிரும் மலர்களோடு 
தாங்கக்முடியாக்கனிகளோடு
பெரும் புதிரான வேர்களோடு

Sunday, May 27, 2012

உங்கள் சந்தேக விழிகளுக்கு முன்னே









 இதுதானென்று 
இவ்வாறென்று
இதற்குத்தானென்று 
இவ்வளவு தானென்று 
திரை விலக்கி

... என்றைக்குமான 
உங்கள் சந்தேக விழிகளுக்கு முன்னே

சட்டென்று அனைத்தையும்
அவிழ்த்தெறிந்து
நிர்வாணமடைகிறேன்
இனி
உங்கள்கண்களுக்கு
நான் அரூபியாகிறேன்!
என் கண்களுக்கு
நீங்கள் குரூபியாகிறீர்கள்! 

Wednesday, May 16, 2012

ஒருகணம் 

இறகை 
இழந்தஈசல் 
எறும்பைப்போல் ஊர்கிறது
இறகைச்சுமந்த எறும்பு 
ஈசலைப்போலவே இருக்கிறது

Saturday, May 12, 2012





அத்தினம் 
கருவானம் 
ஒளிர் நிலவு 
காணக்கிடைக்காத காட்சி
நீரின் தோகைகளை
விரித்தாடியது 
கடல் மயில்






















Thursday, May 10, 2012

அன்புள்ள அன்பிலார்




நெடுங்காலமாகியும்

அன்புள்ள
எனக் கடிதமெழுதஆரம்பிக்கும்
நாம்
சிலவிசயங்களை
தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

அன்புஎன்று
மகத்தான பொய்யை
முதலில்
நாம்எழுதத்தொடங்குகிறோம்.

பெரும்பாலும்
அன்பு இல்லாதவற்க்கே
அதை எழுதுகிறோம்.

நம்மிடம்
அதுஇருப்பதுபோல்
பாவித்துக்கொள்கிறோம்

அது இருப்பதால்தான்
இப்பூமி
இன்னும்இயங்குகிறது
எனச்சொற்களால்
நிர்மாணிக்க முயலுகிறோம்
.

Monday, May 7, 2012

பிரார்த்தனை வாழ்க்கை







கேட்டதுஎல்லாம் கிடைத்தது
கிடைத்தது எல்லாம் கேட்டதுதான்
கேட்டதில்சில கிடைக்காமலும்
கிடைத்ததில்சில
கேட்காமலும் கிடைத்ததுதான்
கேட்பதற்கும் கிடைப்பதற்கும்
இடையே
பிரார்த்தனை வாழ்க்கை
நடக்கிறது இன்னும்

Friday, May 4, 2012

பார்வைகள் பலவிதம்





நீ
அதைப் பார்க்காது
மற்றதைப் பார்க்கிறாய்

நான்
மற்றதைப் பார்க்காது
அதை மட்டும்
பார்க்கிறேன்