Thursday, August 19, 2010

முத்தம் - சில குறிப்புகள்













முத்தம்


ஒரு நெருப்புக்குச்சியில்

பற்ற வைத்த

இரு சிகரெட்டுகள்.





ஓரே ஒரு முத்தத்தையுண்டு

பசியாறிக்கொள்கிறார்கள் காதலர்கள்



மரம் குனிந்து எண்ணிச்சொல்லாம்

தானுதிர்த்த இலைகளை



கடலலைகள் கூறி விடலாம்

கரையில் கிடக்கிற மணல் துகள்களின் எண்ணிக்கையை



வானம் வரைந்து காட்டிவிடலாம்

தன் மீது பூத்த நட்சத்திரங்களை



எப்பொழுதும் சொல்ல இயலாதது

ஒரு காதல் யுவதிக்கும், யுவனுக்கும்

எக்கணத்தில்


ஒரு முத்தம் நிகழக்கூடுமென்று

 கீற்று.காம் இதழில் வெளியான கவிதை

Tuesday, August 17, 2010

சமீபத்தில் ரசித்த கவிதை









நட்சத்திரம் எப்படியிருக்கும்?

வட்டமா!

வானத்தில் நட்சத்திரம் இரவில்என்ன செய்யும்?

தூங்கும்!

(கோடை FM பூந்தளிர் நேரத்தில். தொகுப்பாளினி கேட்ட கேள்விகளுக்குLKG படிக்கிற சிறுமி தந்த பதில்கள் )






Tuesday, August 10, 2010

தேவதைகளின் கதைகள்

. பறவைகள் கூடுதிரும்புகின்றன


குஞ்சுகளுக்கு இரையோடு

குழந்தைகள் வீடுதிரும்புகின்றன

தாய்க்குச் சொல்லக் கதைகளோடு.



.பொம்மைகளோடும்

பேசுகின்றன குழந்தைகள்

குழந்தைகளோடும்

பேசுவதில்லை நாம்.



.அடித்த தாயையே

கட்டிக்கொண்டழுகிறது

ஆறுதல் சொன்னவர்களை

விட்டுவிலகியோடுகிறது.



.குழந்தைகள் உறக்கத்தில் முணுமுணுக்கின்றன

தேவதைகளின் கதைகளை வாசிக்கின்றன.


கீற்று.காமில் வெளியான கவிதை