Tuesday, October 11, 2011

27 ம் 67 ம்





27  வயது இளைஞனும்
67  வயது முதியவரும்
இணைந்து
நடை பயிற்சி செய்கின்றனர்

நடைவேகம் கூடக்கூட
27  க்கு மூச்சிறைக்கிறது

67  ன்வேகம்,
27 -ஐவிடக் கூடுகிறது
27  ,
67-ஐ விஞ்ச முயன்று தளர்கிறது

27  , 67- ஆகவும்
67  , 27- ஆகவும்
வீடு திரும்புகிறது

Friday, October 7, 2011

ஒருகோப்பைத்தேநீர்.








கண்ணாடிப்பேழையில் உறங்கும் புத்தர் 
சற்று நேரத்தில்விழித்து  எழக்கூடும்.
அதற்க்குள்  தயாரிக்க வேண்டும் அவர் 
அருந்த ஒருகோப்பைத்தேநீர்.