Thursday, November 21, 2013

எனக்கான பேருந்துகள்.




பார்வை பரிவர்த்தனைகள் 
சைகை சமிக்ஞைகள் 
நொடியில் எழுந்து 
இடம் மாறிப் பறக்கின்றன முத்தப்பறவைகள். 
நிறுத்தத்தில் 
நழுவ விட்டுக்கொண்டிருக்கிறேன் 
அல்லது
நிற்காது சென்று விடுகின்றன 
எனக்கான பேருந்துகள்.