ரவிஉதயன்
Wednesday, October 15, 2014
ஈசல்களுக்கு.
இறந்து போகிற துயரங்கள்
என்றுமிருந்ததில்லை.
மீண்டும் மீண்டும்
சுடரிடம் சொல்ல
ஏதோ
இருந்திருக்கின்றது ஈசல்களுக்கு.
Wednesday, October 1, 2014
கற்றுக்கொண்டது
சுடரிடம் நான்
கற்றுக்கொண்டது
அணையும் வரை தன் நடனத்தை
வசீகரத்தில் வைத்து கொள்வது.
மெழுகுவர்த்தியிடம்
கற்றுக்கொண்டது
அணைகிற வரை
சுடரின் நடனத்திற்கு
உருகுவது.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)