Wednesday, February 6, 2013

கல் எறிந்தவர்கள்




பிளாட்பாரத்திலிருந்து 
பிரிகிறது ரயில்.
ஒரே தருணத்தில்
சில நூறு கரங்கள் உயர்ந்து
கையசைக்கின்றன
சட்டென
எழும்பிப்பறக்கின்ற
பறவைகள் போல!

கல் எறிந்தவர்கள்
கண்களிருந்து
மெதுவாகக் காணாமல்
போகிறார்கள்.

நவீன விருட்சத்தின் 92 வது இதழில்  வெளியான எனது கவிதை.  

3 comments:

”தளிர் சுரேஷ்” said...

அருமை! வாழ்த்துக்கள்!

இராய செல்லப்பா said...

ரயில் கவிதைகளையே அதிகம் எழுதுவீர்களோ? அற்புதம். வாழ்க உங்கள் கவித்திறன்.

ரவிஉதயன் said...

நன்றி செல்லப்பா சார்