Saturday, March 5, 2011

நீ அறியும் பூவே









அத்தனை பெண்களின்
கண்களும் அதன்மீதுதான் !

சடைப் பாம்புகள்
தரை  தீண்டத் துடிக்கும்.

இத்தனை முடிஆகாது வீட்டிற்கு என்பாள்
தலைவாரி விடும் அம்மாதினமும்.

ரோஜா,

கனகாம்பரம்,

சிலபொழுது மனோரஞ்சிதம்,

எப்பொழுதும் சிறு மல்லிகை இணுக்கு.

இவற்றைத் தின்று வளர்கிறது
என் கருங்கூந்தல்.  
(இம்மாத ரசனை  இதழில் வெளியான எனதுஒருகவிதை)

4 comments:

ஜீவன்சிவம் said...

அருமை...
நீண்ட கூந்தலை போல கவிதை வரிகளும் இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாம்

vasu balaji said...

அழகு

Thenu said...

அருமை.. அழகு.. மிகவும் வித்தியாசமான வரிகள்.. வாழ்துக்கள்..

ரவிஉதயன் said...

நன்றி ஜீவன்சிவம்,வானம்பாடிகள்,தேனு.