Friday, December 16, 2011

கடைச் சொல்







கிளையிலிருந்து
தரைக்குவீழ்கிற
இலையைப்போன்று
ஒரு கணித நுட்பம்

தவிப்பு மனிதர்களின்
தந்திர வழி என்கிறார்கள் ?

 தீர வலிக்குச்செய்து கொள்ளும்
நித்தியப்பணிவிடை என்கிறார்கள் ?

 காதல் ஜோடிகளின்
கைகளிலிருக்கிற
கடைசி துருப்புச்சீட்டுஎன்கிறார்கள் ?

 போதுமானதொரு
வாழ்விலிருந்து
 மீளும் சுய விலகல் என்கிறான் ஞானி!

ஒருவேளை
 துடித்தடங்கும் இக்கயிற்றை
அறுத்து
 நீங்கள்தரையிறக்குகையில்

 உடைந்த
 குரல்வளையில்
எஞ்சியிருக்கலாம்
 என் தற்கொலைக்கான
கடைசிச்சொல்.





    

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மனதை நெகிழவைக்கும் வரிகள்...

நல்லதெரு படைப்பு...

ரவிஉதயன் said...

நன்றி சௌந்தர்