விடுதியறை இரவு
நான்கு பக்கங்களிலும்
புணர்வை எதிர்நோக்கி
விழித்திருக்கும்
ஓட்டைகள்.
பாத்ரூம் கண்ணாடியில்
பெண்கள் விட்டுப்போன
ஸ்டிக்கர்ப்பொட்டுகள்.
இரண்டு படுக்கையுடன்
கூடிய அறையில்
நான் மட்டும் தனியாய்
ஒரு படுக்கையில்.
இன்னொரு படுக்கையில்
படுத்திருந்தது
என் காமம்.
4 comments:
அருமை ரவி உதயன்!
நன்றி சமுத்ரா
நல்லாயிருக்குங்க ரவி....
நன்றி பாலா சி
Post a Comment