இன்று
உன் சாயல்
கொண்டவளோடு செல்கிறேன்
எனதுசாயலோடு
இருப்பவனுடன்
நீ இருக்கக் கூடும்
புலப்படாத தொலைவுகளில்
நாம்
பகிர்ந்து கொள்ளும்
சில முத்தங்கள்
நம் முத்தைஒத்திருக்கின்றன
அம் முத்தங்கள்
சற்று கூசுகின்றன எனக்கு.
.
(இம்மாதஉயிர்மை இதழில் வெளியான எனது கவிதை) .
No comments:
Post a Comment