Friday, January 7, 2011

உலகம் சுற்றும் குழந்தைகள்






நகரும் பொம்மைகள்,
உருளும் பந்துகள் ,
ஓடும் சிறுமிதி வண்டி
ஒரு வீடு மைதானமாகிறது.

மானைபோல் துள்ளல்,
தவளை  போல கனைப்பு
முயலைப்  போல்  தாவல்
ஒரு வீடு வனமாகிறது .

சிறு செப்பில்  மண் சோறு. 
 பச்சைப்  புல் துவையல்,
மழைத்தண்ணி  தேநீர்,
ஒரு வீடு  மணல்வீ டாகிறது.

மயிலிறகில் கீரிடம்,    
கண் மையில் மீசை,
மினுக்கும் அட்டைக்கத்திகள்
ஒரு வீடு  அரண்மனையாகிறது.

குழந்தைகள் வசிக்கிற ஒரு வீடு

ஒரு உலகமாகிறது

5 comments:

vasu balaji said...

தினமும் காணும் காட்சிகள்
கவிஞனின் பார்வை
காட்சிகள்
கவிதையாகின்றன:)

அருமைங்க

ரவிஉதயன் said...

நன்றிங்க வானம்பாடி

க.பாலாசி said...

இதுதான் அழகான உலகம்.... நல்ல கவிதைங்க...

க ரா said...

அழகான கவிதைங்க.. நன்றி

ரவிஉதயன் said...

நன்றிபாலா சி ,மற்றும் ராமசாமி